பத்திரிகைக்கு கண்டிப்பு

உல்ஃபா பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், இறையாண்மைக்கான கோரிக்கை உள்ளிட்ட அவர்களின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் அசாம் அரசு தயாராக இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா வழக்கம்போல செய்தியை திரித்து வெளியிட்டது. உல்ஃபா அமைப்புடனான அரசின் சமாதானப் பேச்சுக்களை திரித்து வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இந்த செய்தியை சமூக ஊடகத்தில் பகிர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ‘​​​​உல்ஃபா பேச்சுவார்த்தையை பற்றிய செய்தியை இப்படி திரித்து வெளியிட்ட உங்களை போன்ற புகழ்பெற்ற செய்தி ஊடகத்தின் செய்தியை பார்த்து நான் அதிர்ச்சி அடைகிறேன். பாரதத்தின் இறையாண்மை குறித்து எந்த முதலமைச்சரும் யாரிடமும் விவாதிக்க முடியாது. இது பேரம் பேச முடியாதது. நாம் அனைவரும் பாரதீயர்கள். பொறுப்பு, பதவிகலை தாண்டி நாம் அனைவரும் பாரதத்தின் இறையாண்மையைப் பாதுகாக்கவே இங்கு இருக்கிறோம். உங்களின் இந்தச் செய்தியை நான் கடுமையாக மறுக்கிறேன். இது பொய்’ என கூறியுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா இப்படி செய்திகளை திரித்து வெளியிடுவது இது முதல்முறை அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.