சீனா ஜெர்மனியை முந்திய பாரதம்

பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார நிபுணர்களின் அறிக்கையில், ‘அதிகரித்த வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை, இணையவழி பண பரிவர்த்தனைகளின் அதிகரிப்பு, வங்கிக் கிளைகளை மறுசீரமைப்பு மற்றும் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவை பாரதத்தின் நிதிச் சேர்க்கை அளவீடுகளை மேம்படுத்தியுள்ளது. பாரதத்தில் அலைபேசி மற்றும் இன்டர்நெட் பேங்கிங் பரிவர்த்தனைகள் 1,000 பேருக்கு 183 என்ற அளவில் கடந்த 2015ல் இருந்தது. அது 2020ல் 1,000 பேருக்கு 13,615 என உயர்ந்துள்ளது. 1 லட்சம் பேருக்கு 13.6 வங்கிக் கிளைகள் என 2015ல் இருந்த எண்ணிக்கை தற்போது 14.7 ஆக அதிகரித்துள்ளது. பாரதம் இதில் சீனா, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளை விட முன்னணியில் உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை, ரூ.1.46 லட்சம் கோடி டெபாசிட்களுடன் 43.7 கோடியை எட்டியுள்ளது. இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு கணக்குகள் கிராமப்புற, புறநகர் பகுதிகளில் செயல்படுகின்றன. இவற்றில் 78 சதவீத கணக்குகள் அரசுக்கு சொந்தமான வங்கிகளில் உள்ளன’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.