லலித் கலா அகாடமிக்கு கண்டனம்

தேசத்தை அவமானப்படுத்தும் விதமாக வரையப்பட்ட ஒரு கார்ட்டூனுக்கு விருது வழங்கிய கேரள லலித் கலா அகாடமிக்கு, கேரள பா.ஜ.கவும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “பல்வேறு நாடுகள் பங்கேற்ற கொரோனா தொற்று தடுப்பு பற்றிய மருத்துவ மாநாடு குறித்து வெளியான கார்ட்டூனில், காவி நிற சால்வை போர்த்திய பசு மாடு பங்கேற்றது போல வரையப்பட்டு இருந்தது. தேசத்தையே அவமானப்படுத்தும் இருந்த இந்தக் கார்ட்டூனுக்கு, கேரள லலித் கலா அகாடமி சிறந்த கார்ட்டூனுக்கான பரிசு வழங்கியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. அரசு லலித் கலா அகாடமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த கேரள லலித் கலா அகாடமி தலைவர் நேமம் புஷ்பராஜ், “தலைசிறந்த கார்ட்டூனிஸ்ட்கள் இணைந்து சிறந்த கார்ட்டூனை தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட படத்துக்குத்தான் பரிசு வழங்கியுள்ளோம். இதில் எங்கள் தலையீடு எதுவும் இல்லை” என்றார்.