இங்கிலாந்தில் நமாமி கங்கே

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காப் 26 மாநாட்டில் வெற்றிகரமான அறிமுகத்திற்குப் பிறகு, கங்கா கனெக்ட் கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்தின் வேல்ஸில் உள்ள கார்டிஃப்பில் திறக்கப்பட்டது. கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை வேல்ஸின் அமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் எம்.எஸ் மற்றும் இங்கிலாந்திற்கான பாரத தூதர் காயத்ரி இஸ்ஸார் குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம், ‘சி கங்கா’ மற்றும் பாரத தூதரகம் ஆகியவற்றால் இதி கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கங்கா கனெக்ட் ஒரு உலகளாவிய கண்காட்சி மற்றும் தகவல் தொடர்பு தளமாகும். நதி அமைப்பின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தும் இந்தக் கண்காட்சி, நதி பாதுகாப்பில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைக்கும். இக்கண்காட்சியில், கங்கை நதி சுற்றுச்சூழல், சிக்கலான தன்மை, செயல்படுத்தப்படும் தீர்வுகள், உருவாக்கப்பட்டு வரும் புதிய வழிமுறைகள், திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் காலக்கெடு, நதியுடன் பாரதியர்கள் கொண்டிருக்கும் ஆழமான ஆன்மீக மற்றும் தத்துவ தொடர்பை விளக்குதல் போன்றவையும் இடம்பெறும்.