புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த முனுசாமி சமீபத்தில் பாரத ஜனாதிபதியிடம் பத்மஸ்ரீ விருது பெற்றார். அவரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் புதுச்சேரிப் பகுதி தலைவர் ஜே சீனிவாசன், பிரச்சாரகர் காமராஜ், செயலாளர் சுந்தரமூர்த்தி, துணை செயலாளர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசி வாழ்த்துத் தெரிவித்தனர்.