பழங்குடியினர் பயோடெக்னாலஜி மையம்

அருணாச்சலப் பிரதேசத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள கிமினில் வடகிழக்கு பழங்குடியினருக்கான புதிய உயிரி தொழில்நுட்ப (பயோடெக்னாலஜி) மையத்தை, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ‘மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த “உயிரி வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சி மையம்” பெரிதும் உதவும். இதன் மூலம், மாணவர் பயிற்சித் திட்டம், தொழில்நுட்பப் பயிற்சித் திட்டம், ஆசிரியப் பயிற்சித் திட்டம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட நான்கு வெவ்வேறு வகையான பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து, பாரதத்தின் வடகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கும், பழங்குடியினரின் மேம்பாட்டிற்கும் சிறப்பு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், விவசாயம், மின்சாரம், உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுற்றுலா, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துரைகளின் மேம்பாட்டிற்கு புதிய வழிகளை உருவாக்குவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.