மணிப்பூரில் சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அம்மாநிலத்தின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான ராஜ்குமார் இமோ சிங், யம்தோங் ஹாக்கிப் ஆகியோர் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் மணிப்பூர் பா.ஜ.க பொறுப்பாளர் சம்பித் பத்ரா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தனர். அம்மாநிலத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் இமோ சிங். காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், “பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் செழிப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக நிறைய பணிகளைச் செய்துள்ளார்” என்று கூறிய காரணத்தால், கட்சிக்கு எதிராக செயல்பட்ட்தாகக் கூறி அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.