ராஜராஜனுக்கு சதய விழா

மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான ஐப்பசி சதய நட்சத்திரத்தன்று, ஆண்டு தோறும் சதய விழா கொண்டாடப்படும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ராஜராஜ சோழனின் 1,036வது சதய விழா, 13ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 13ம் தேதி காலை 7:00 மணிக்கு, பெரிய கோயிலின் வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். காலை 9:00 மணிக்கு, 36 வகை திரவியங்களால் அபிஷேகம், பகல் 1:00 மணிக்கு மகாதீப வழிபாடு, மாலை 6:00 மணிக்கு சுவாமி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.