கர்நாடகாவில் உள்ள கரிஞ்சேஸ்வரா கோயிலில் காலணிகளுடன் நுழைந்த நான்கு பேர் கோயிலின் புனிதத்தை களங்கப்படுத்தினர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. இதனையடுத்து கோயில் நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. இதனை விசாரித்த காவல்துறை, கேரள மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட காரில் வந்த அந்த நால்வரையும் கைது செய்தது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான புஷர் ரெஹ்மான், இஸ்மாயில் அர்ஹமாஜ், முகமது தனிஷ், மற்றும் முகமது ரஷாத் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.