ஹிந்து பக்தர்கள் இறைவனுக்கு வேண்டுதலின் பேரிலும் காணிக்கையாகவும் அளித்த தங்க நகைகளை தமிழக அரசு உருக்கி வருகிறது. ஹிந்துக்களின் எதிர்ப்பை மீறி இந்த வஞ்சகத்த் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தி.மு.க அரசின் இந்த செயலை கண்டித்தும், கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடக் கோரியும் இந்து முன்னணி சார்பில் தமிழகமெங்கும் கோயில்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.