தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட அயோத்தி ராம்லீலா, ராமாயணத் திரைப்படங்கள், நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இந்த சிறப்பு நிகழ்ச்சிகளால் டி.டி நேஷனல் பார்வையாளர்களின் எண்ணிக்கை 421 சதவீதம் அதிகரித்துள்ளது. நவராத்திரியை முன்னிட்டு விஜயவாடா கனக துர்கா தேவியின் குங்கும பூஜை, அலங்காரம், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி நவராத்திரி பிரம்மோத்ஸவம், டெல்லின் ஜாண்டேவாலனின் ஆரத்தி, சத்தர்பூர் மந்திர், கொல்கத்தா மஹாலயா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள், தசரா மகோத்ஸவம், ஆரத்தி நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் ஒளிபரப்பியது. தினமும் 6.7 மணி நேரம் என 10 நாட்களில் 67 மணிநேர சிறப்பு நிகழ்ச்சிகள் டி.டி நேஷனல் ஒளிபரப்பியது.