வன்முறைக்கு காரணமானவர் கைது

வங்கதேசத்தில் சமீபத்தில் முஸ்லிம் மதவெறிக் கும்பல்கள் ஹிந்துக்கள் மீதும் ஹிந்து கோயில்கள் மீதும் வன்முறை வெறியாட்டம் நடத்தின. கோயில்கள் எரிப்பு, வீடுகள் எரிப்பு, பெண்கள் மானபங்கம், சூறையாடல் என பல கோர சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ஏழு பேர் உயிரிழந்தனர். சமூக ஊடகத்தில் மத உணர்வை துாண்டும் செய்தி பரவியதே வன்முறைக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் வன்முறைக்கு காரணமான இக்பால் உசேன் என்பவரை வங்கதேச காவல்துறை கைது செய்துள்ளது. அவர் கொமில்லாவில் உள்ள கோயிலில், துர்கா பூஜையின் போது குரான் நுாலை ரகசியமாக வைத்துள்ளார். இது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் இக்பால் உசேன் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.