இணைந்த நண்பர்கள்

இம்ரான் கான் கனவு கண்டதற்கு நேர்மாறாக, உலகளாவிய பயங்கரவாத நிதியளிப்பு கண்காணிப்புக் குழு (FATF) சமீபத்தில் அதன் ‘சாம்பல் பட்டியலில்’ இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற மறுப்புத் தெரிவித்துவிட்டது. மூன்று நாள் நீடித்த அமர்வுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த முடிவை FATF தலைவர் மார்கஸ் பிளேயர் அறிவித்தார். இது, பாகிஸ்தானுக்கு பெரும் அடியாகக் கருதப்படுகிறது. இதனால், அந்நாடு வெளிநாடுகளிடம் நிதியுதவியை கோரமுடியாது. ஏற்கனவே கடும் நிதி சிக்கலில் இருக்கும் பாகிஸ்தான் இதனால் மேலும் நிதிச் சிக்கலை வரும் நாட்களில் சந்திக்கும். சுவாரஸ்யமாக, பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் இருந்து வெளியேற்ற உதவி புரிவதாக வாக்களித்த அதன் உற்ற நண்பனான துருக்கியும், பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிகள் காரணமாக புதிதாக இந்த சாம்பல் பட்டியலில் சேர்ந்துள்ளது.