ஆப்கனில் தலிபான் கொடூரம்

ஆப்கானிஸ்தான் மகளிர் கைப்பந்து அணியின் இளம் பெண் விளையாட்டு வீராங்கணை மஹ்ஜுபின் ஹகிமியின் தலையை தலிபான்கள் வெட்டிக் கொன்றுள்ளனர். மற்ற விளையாட்டு வீராங்கணைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. பாரசீக ஊடகத்திற்கு பேட்டியளித்த ஆப்கானிஸ்தான் மகளிர் தேசிய கைப்பந்து அணியின் பயிற்சியாளர்களில் ஒருவர் இத்தகவலை உறுதி செய்துள்ளார். மேலும், ‘தலிபான்கள் வீராங்கணைகளை பல்வேறு நகரங்களில் தேடிவருகின்றனர். கைப்பந்து அணியின் இரண்டு வீரர்கள் மட்டுமே ஆப்கனை விட்டு வெளியேற முடிந்தது. மற்றவர்கள் அச்சுறுத்தலிலும் பயத்திலும் உள்ளனர். அனைவரும் வீட்டைவிட்டு தப்பி ஓடி மறைமுகமாக வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்’ என தெரிவித்தார்.