மரபணு மாற்ற அரிசி கிடையாது

பாரதத்தில் இருந்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் விடுத்துள்ள விளக்கத்தில், பாரதத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி வகைகள் எதுவும் இல்லை. மரபணு மாற்ற அரிசி வர்த்தகத்துக்கு பாரதத்தில் தடை உள்ளது. மரபணு மாற்றம் செய்யப்படாத அரிசியைத்தான் உலக நாடுகளுக்கு பாரதம் ஏற்றுமதி செய்கிறது. ஐரோப்பிய யூனியனில் அரைக்கப்பட்ட அரிசி மாவில்தான் இந்த மரபணு மாசு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அந்த அரிசி எங்கிருந்து வந்தது என்பதை அவர்களால் உறுதி செய்ய முடியவில்லை. பாரதத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட பச்சரிசிக் குருனை, ஐரோப்பிய யூனியன் சென்றடைவதற்கு முன் பலரிடம் கைமாறியுள்ளது. அதனால் எங்காவது கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம். பாரதத்தின் புகழைக் கெடுக்கச் சதி நடந்திருக்கலாம். இதுகுறித்து வேளாண் ஆராய்ச்சி மைய நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.