மதமாற்றம் பஞ்சாப்பின் சாபம்

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணை பொது செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின், ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில், ‘சட்டவிரோத மத மாற்றங்களுக்கு எதிராக சமீபத்தில் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுத் தலைவர் பிபி ஜாகிர் கௌர் மற்றும் அகல் தக்த் ஜத்தேதார் கியானி ஹர்பிரீத் சிங் ஆகியோர் எழுப்பிய குரலை வி.ஹெச்.பி வரவேற்கிறது. சர்ச்சுகளால் மேற்கொள்ளப்படும் மதமாற்றங்கள் பஞ்சாப் என்ற புனித பூமியின் சாபம். இதற்கு தகுந்த பதில் கண்டிப்பாக வழங்கப்படும். இந்த சதியை முடிவுக்கு கொண்டுவர வி.ஹெச்.பி உதவும்.

பஞ்சாபின் வரலாறு தர்மத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டங்கள், தியாகங்களின் வரலாறு. போற்றத்தக்க பல குருமார்கள் தர்மத்தை காக்க உத்வேகம் அளித்தனர். போராட்டங்களை நடத்தினர், தியாகங்களை செய்தனர். அதனை மறக்க முடியாது. மதமாற்ற மிஷனரிகள் இந்த தியாகங்களை அவமானப்படுத்துகின்றன. கிறிஸ்தவ மிஷனரிகள் மத மாற்றங்களை செய்ய வலிமை, மோசடி, கவர்ச்சியை மட்டுமே பயன்படுத்துகின்றன.

அவர்களின் குணப்படுத்தும் சபைகள் உண்மையில் மக்களை குணப்படுத்தும் என்றால், அவர்கள் போதகர்கள் நோய்வாய்ப்பட்டபோது ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்? கொரோனாவால் பாதிரிகள் சிலரும் இறந்தனர். குணப்படுத்தும் மையங்கள் தங்களின் அன்புக்கு உரியவர்களைக்கூட குணப்படுத்த முடியாதபோது, ​​அவர்கள் ஏன் அப்பாவி மக்களை முட்டாளாக்குகிறார்கள்?

தீவிர நோய்களுடன் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பஞ்சாபில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மிஷனரிகள் குணப்படுத்துவதன் மூலம் தங்கள் சக்தியை நிரூபிக்க வேண்டும் என சவால் விடுக்கிறேன்.

சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்களின் புனித நூல்கள் முழு மனிதகுலத்தின் நலனுக்கான விலைமதிப்பற்ற செய்திகளைக் கொண்டுள்ளன, அதை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்கிறது.

ஒரு பிரான்ஸ் நாட்டின் ஒரு விசாரணை கமிஷன் திகிலூட்டும் அறிக்கையை வெளியிட்டது. குழந்தைகள், கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு வாடிகன் நகரமும் விதிவிலக்கல்ல. பாரதத்தில், பல கன்னியாஸ்திரிகள் இதன் காரணமாக தற்கொலை செய்துகொண்டனர். பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது கிறிஸ்தவ சமூகம் வெட்கமின்றி அவரை மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றது.

சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு, அகல் தகத்தின் மதமாற்றங்களுக்கு எதிரான முயற்சியின் பலனாக பஞ்சாபில் மதமாற்றம் நிறுத்தப்படும் என கருதுகிறோம்.  பஞ்சாபி சமுதாயத்தின் உணர்வுகளையும், குருமார்களின் மரபுகளையும் மதித்து, மதமாற்ற எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுமாறு பஞ்சாப் அரசை வி.ஹெச்.பி கோருகிறது’ என பேசினார்.