காஷ்மீரில் என்.ஐ.ஏ விசாரணை

ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் சுமார் 11 ஹிந்துக்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் சமீபத்தில் கொல்லப்பட்டனர். உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், இதில் சம்பந்தப்பட்ட நான்கு வழக்குகளை, ஜம்மு காஷ்மீர் காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. முன்னதாக, ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீரின் அமைதி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றம் மற்றும் மக்களின் வளர்ச்சியை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பிரதேசத்தின் வேகமான வளர்ச்சி உறுதிப்படுத்தப்படும். பயங்கரவாதிகளையும் அவர்களின் அனுதாபிகளையும் வேட்டையாடுவதன் மூலம் இறந்த அப்பாவிகளின் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழிவாங்கப்படும் என கூறியிருந்தார்.