கோயிலை காத்திட திரண்ட மக்கள்

நீலகிரி மாவட்ட படுகர் இன மக்களின் பழமை வாய்ந்த கலாச்சாரச் சின்னமான ஹெத்தையம்மன் கோயிலை கையகப்படுத்த தீவிரமாக முயன்றுவரும் ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் படுகர் இன மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.