வேலூரில் பசுமை

வேலுார் ஓம் சக்தி நாராயணி பீடம் சார்பில், வித்யா நேத்திரம் திட்டத்தின் கீழ் உயர் கல்வி படிக்கும் ஏழை எளிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா திருமலைக்கோடியில் நடைபெர்றது. இதில் கலந்துகொண்டு பேசிய  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், 400 பேருக்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங்கி பேசியபோது, ‘ஓம் சக்தி நாராயணி பீடம் லட்சக்கணக்கான மரங்களை நட்டதால் வெய்யிலுார் என்ற பெயர் மாறி குளிர்ச்சி ஊராக வேலுார் மாறி விட்டது. வித்யா நேத்திரம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேருக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளந. இதனால் 520 பேர் டாக்டர்களாவும், 2,100 பேர் பொறியாளர்களாகவும் உள்ளனர்’ என தெரிவித்தார்.