வாயடைத்துப்போன சன் டி.வி நிருபர்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையுடனான செய்தியாளர்கள் சந்திப்பில், அண்ணாமலை, கோபாலபுரத்தினரைத் தவிர வேறு யாராவது கட்சி தலைமைக்கு வரமுடியுமா என கேட்டார். அண்ணாமலையின் பேச்சை தடுக்கும்விதமாக, சன் டி.வி நிருபர் வேண்டுமென்றே இடைமறித்து பேசினார். அப்போது அண்ணாமலை, ‘கோபாலபுரத்தை பற்றி நான் பேசினால் நீங்கள் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிறீர்கள் பிரதர்? சன் டி.வி உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறது, நிருபர் வேலை செய்கிறீர்கள். அத்துடன் விட்டுவிடுங்கள் பிரதர். எதற்கு டென்சன் ஆகிறீர்கள். நீங்கள் என்ன கோபாலபுரத்திலேயா பிறந்தீர்கள்’ என கேட்டார்.