வங்கதேசத்தில் உள்ள முஸ்லிம் வன்முறையாளர்கள் நவராத்திரியை ஒட்டி ஹிந்துக்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தினர். அதில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். 80க்கும் அதிகமான ஹிந்து கோயில்கள் தாக்கப்பட்டுள்ளன. பல துர்கை சிலைகள் உடைக்கப்பட்டன. இதற்கு பாரதம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், புகழ்பெற்ற வங்கதேச எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரீன், இது குறித்த தனது அறிக்கையில், ‘காபாவில் முகமது நபி 360 சிலைகளை அழித்தார். அவரைப் பின்பற்றுபவர்கள் இப்போது அவரது செயலைப் பின்தொடர்கின்றனர். வங்க தேசத்தில் உள்ள கம்யூனிஸ்டுகள் எப்போதும் ஜிஹாதிகளுக்கு ஆதரவளித்து வருகின்றனர். இதனால், அவர்கள் “கவாமினிஸ்டுகளாக” மாறிவிட்டனர். வங்க தேச முஸ்லீம்கள் இருவகைப்பட்டவர்கள். ஒன்று ஜிஹாதிகள் மற்றொன்று ஜிஹாதி ஆதரவாளர்கள். முஸ்லிம் சமூகத்தில் நல்ல உணர்வும் மனசாட்சியும் கொண்ட மக்கள் மிகவும் சொற்பமானவர்களே. அவர்களின் அடையாளம் நல்ல மனிதர்கள் அல்லது மனிதநேயவாதிகள்’ என்று தெரிவித்துள்ளார்.