ஒடிசாவில் உள்ள சூரியனார் கோயிலில் சூரிய ஒளி விழுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு, ஆண்டு தோறும் ஸ்ரீராம நவமியின்போது அயோத்தியில் வேகமாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோயிலின் கருவறைக்குள் சூரிய ஒளி விழும் வகையில் கட்டப்பட உள்ளது. இதற்காக வானியல் வல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கோயிலை 2023 டிசம்பருக்குள் திறக்கும் வகையில் பணிகள் விரைவாக நடக்கின்றன என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் கூறியுள்ளார்.