சம்ஸ்கார் பாரதி அமைப்பின் கலாச்சாரப் பிரிவின் தேசிய பொது செயலாளர் அமிர் சந்த், கடந்த சனிக்கிழமை அன்று அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கில் காலமானார். ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகராக அவர், பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களை ஊக்குவிப்பதிலும் அந்த கலைகளை வளர்ப்பதிலும் பெரும் பங்காற்றினார். பாரம்பரிய கலைஞர்களுக்கு மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள், உதவிகளை பெற்றுத்தந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பெரிதும் முயன்றார். இதனால், அவர்கள் அனைவருக்கும் மிகவும் பிரியமான சகோதரனாக திகழ்ந்தார். அவரை இழந்துவாடும் சம்ஸ்கார் பாரதி அமைப்பினருக்கு விஜயபாரதம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.