மீனவர்களுக்கு மத்ஸ்ய சம்பதா

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணையமைச்சர் எல் முருகன், கர்நாடக மாநிலத்தில் மேற்கொண்ட அரசு முறை பயணத்தின்போது, செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம் கடலோரப் பகுதி மக்களை சென்றடைந்துள்ளது. இது, பகுதிகள் அடிப்படையிலான அணுகுமுறையில் முக்கிய கவனம் செலுத்தி மீன்பிடித் தொகுப்புகளை உருவாக்குகிறது. இத்திட்டத்தில் கடற்பாசி வளர்ப்பு, அழகு மீன்கள் வளர்ப்பு போன்ற வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்தப்படும். தரமான மீன் இனப்பெருக்கம், முட்டைகள் மற்றும் தீவனம், இனங்களை பல்வகைப்படுத்தல், உள்கட்டமைப்பு, சந்தைப்படுத்தல் போன்றவற்றில் இத்திட்டம் சிறப்புக் கவனம் செலுத்துகிறது. தற்போதுவரை பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக  மீன்வளத்துறை 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ. 1,723 கோடி மதிப்பிலானத் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடல், மீன் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வருமானத்தை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது’ என தெரிவித்தார்.