100 சைனிக் பள்ளிகள்

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் சைனிக் பள்ளிகள், மத்திய அரசு ஆகியவற்றுடன் இணைந்து தனியார்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் மூலம் 100 சைனிக் பள்ளிகளைத் தொடங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கெனவே செயல்பட்டு வரும் சைனிக் பள்ளிகளில் இருந்து இப்பள்ளிகள் வேறுபட்டு தனித்தன்மையுடன் செயல்படும். இப்பள்ளிகளில் புதிய கல்விக்கொள்கையின்படி, குழந்தைகளுக்கு கலாச்சார பெருமை, தேச பாரம்பரியம், தலைமைப் பண்பு, ஒழுக்கம், தேசபக்தி ஆகியவற்றை வளர்க்கும் மதிப்பு அடிப்படையிலான கல்வி வழங்கப்படும். மேலும், உடற்பயிற்சி, சமூகத்தில் பழகுதல், ஆன்மீகப் பயிற்சி, மனவலிமைப் பயிற்சி, அறிவார்ந்த பயிற்சிகள் போன்றவையும் பயிற்ற்றுவிக்கப்படும். நாடுமுவதும் உள்ள குழந்தைகள் குறைந்த செலவில் பயிலும் வகையில் இப்பள்ளிகள் அமையும். விருப்பமுள்ள தனியார் அமைப்புகள், தனியார் பள்ளிகள், மாநில அரசுகள், தொண்டு நிறுவனங்கள் சைனிக் பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.