உர மானியம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான பாஸ்பேட், பொட்டாசிய உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான 28,655 கோடி ரூபாய் நிகர மானியத்தை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல, கடந்த ஜூன் மாதத்திலும், சிசிஇஏ, டிஏபி மற்றும் வேறு சில யூரியா அல்லாத உரங்களுக்கான மானியங்களை ரூ. 14,775 கோடியாக உயர்த்தியது. டிஏபி மீது கூடுதல் மானியத்திற்காக ஒரு முறை சிறப்பு தொகுப்பு நிதியாக ரூ. 5,716 கோடி வழங்கியுள்ளது. 2021 – 22 வரவு செலவுத் திட்டத்தில் உர மானியத்திற்காக மத்திய அரசு சுமார் 79,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. என்பிகே உரங்களின் கூடுதல் மானியத்திற்கான சிறப்பு ஒரு முறை தொகுப்பு நிதியாக ரூ. 837 கோடி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நிதி ஆண்டில் மொத்த உர மானியங்கள் மொத்தமாக ரூ. 1 லட்சம் கோடியை தாண்டும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.