எய்ம்ஸ் இயக்குநருக்கு விருது

கொரோனா காலத்தில் சிறப்பான செயல்பாட்டிற்காக எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவுக்கு, லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதை குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கய்யா நாயுடு வழங்கினார். அப்போது பேசிய அவர், லால் பகதூர் சாஸ்திரியின் தைரியமான தலைமை வரலாற்றையும், சர்வதேச சமுதாயத்தையும் மாற்றியது, தனது குறுகிய கால பிரதமர் பதவியில் பல திடமான முடிவுகளை எடுத்தார். சுதந்திரத்திற்குப் பின் முதல் முறையாக புதிய பாரதத்தின் பிரகாசத்தைக் கண்டது என லால் பகதூர் சாஸ்திரிக்கு புகழாரம் சூட்டிய வெங்கையா நாயுடு, ‘கொரோனா பெருந்தொற்றுக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா முக்கிய பங்காற்றினார். பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அச்சத்தைப் தனது பேச்சு மூலம் டாக்டர் ரன்தீப் குலேரியா போக்கினார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தன்நலம் இன்றி பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு அவர் ராணுவத் தளபதி போல் வழிகாட்டினார்’ என ரன்தீப் குலேரியாவை பாராட்டினார்.