தெலுங்கு திரைத்துரையை கைக்குள் வைத்திருக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப ஆதரவு ,இடதுசாரிகளின் தொடர் பிரச்சாரம் என்று 2 மாதத்திற்கு முன்பில் இருந்தே தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் பிரகாஷ் ராஜ் முன்னணியில் இருந்தார். எதிர் தரப்பில் தேசிய சிந்தனையாளரான நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்ஜு களம் கண்டார். மோகன் பாபு பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர். அவருடைய குடும்பத்தை தெலுங்கு சினிமாவில் உள்ள பா.ஜ.க குடும்பம் என்றே கூறுவார்கள்.
இந்த சூழலில், சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் பிரகாஷ் ராஜூவுக்கு 274 ஓட்டுக்களும் விஷ்ணு மஞ்சுவுக்கு 380 ஓட்டுக்களும் கிடைத்தன. பிரகாஷ் ராஜை நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு 106 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருக்கிறார். கம்யூனிசம் பேசும் பிரகாஷ் ராஜூவுக்கு ஆதரவாக தெலுங்கு படவுலகின் முன்னணி நடிகர்கள் ஓட்டு போட்டுள்ளனர். ஆனால், தெலுங்கு பட உலகின் நலிந்த கலைஞர்கள் பலர் விஷ்ணு மஞ்சுவுக்கு ஓட்டு போட்டுள்ளனர் என்பது இதில் கவனிக்க வேண்டியது.
இதனால் பிரகாஷ் ராஜூவுக்கு ஆதரவாக இருந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தேர்தல் முடிவு அதிர்ச்சியை அளிக்கிறது என்றாலும் புதிய தலைவர் நலிவடைந்த கலைஞர்களின் வாழ்வுக்காக பாடுபடுவார் என்பதால் விஷ்ணு மஞ்சுவை பாராட்டுவதாக கூறியுள்ளார். தெலுங்கானா பா.ஜ.க தலைவர் பண்டி சஞ்சய் குமார் நடிகர் சங்க தேர்தலில் தேச விரோத சக்திகளை தோற்கடித்து விஷ்ணு மஞ்சுவை வெற்றி பெற வைத்த தெலுங்கு நடிகர் சங்க அமைப்பான எம்.ஏ.ஏ உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதில், தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தல் என்பது நடிகர்களின் முன்னேற்றத்திற்கான, நடிகர்களால் மட்டுமே நடத்தப்படும் தேர்தல் அல்ல. தமிழ் திரைத்துறை, பாலிவுட் போலவே அங்கும் திரைத்துறையை அரசியல்தான் பின்புலமாக இருந்து ஆட்டிவைக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசுதான், சி.ஏ.ஏ மோசமானது என்றெல்லாம் பொய் பிரச்சாரம் செய்து திரைத்துறையினரை மூளைச்சலவை செய்ய முயன்ற பிரகாஷ் ராஜையோ, அவருக்கு பின்புலமாக செயல்பட்ட பெரும் பணபலம் படைத்தவர்கள், பிரபலங்கள், இடதுசாரிகள், கிறிஸ்தவர்கள், சிரஞ்சீவி போன்றோரை சாமானிய நடுத்தர கலைஞர்கள் கண்டுகொள்ளவில்லை, உண்மையின் பக்கமே நின்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. இது உண்மையில் ஆரோக்கியமான வரவேற்கத்தகுந்த மாற்றம். தொடரட்டும், பரவட்டும்.