கன்னியாகுமரி கனிம வள கொள்ளையை கண்டித்து அப்பகுதி மக்கள், அங்கு சென்ற தி.மு.க சபாநாயகர் அப்பாவு வண்டியை மறித்து நியாயம் கேட்கவும், நடவடிக்கை எடுக்கவும் முறையிட சென்றனர். ஆனால், தி.மு.கவின் சபாநாயகர் அப்பாவு காருக்குள் இருந்து இறங்கி மக்களிடம் குறையே கேட்கவில்லை. மாறாக, அவரின் கார் அங்கு சூழ்ந்திருந்த மக்கள் மீது முட்டி, மோதி, பயமுறுத்தி அங்கே நிற்காமல் சென்றுவிட்டது என்று சமீபத்தில் செய்தியும் வீடியோ பதிவும் வெளியாகி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கார் அப்படி முட்டி மோதியதில் யாருக்காவது எதாவது ஆகியிருந்தால் என்ன ஆகியிருக்கும், மக்களின் குறையை கேட்காமல் அதனை போக்க நடவடிக்கை எடுக்காமல் இப்படி நடந்துகொள்வது முறையா, இதற்காகவா ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தோம், இதுவே மற்ற கட்சியினர் இப்படி செய்திருந்தால் தி.மு.கவினர் சும்மா இருப்பார்களா? என சமூக வளைத்தளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பதில் அளிப்பாரா சபாநாயகர்?