ஏற்றுமதி இலக்கு உயர்வு

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் தலைவர்களுடன் இடைக்கால ஆய்வு கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் உரையாற்றியபோது, ”புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை விரைவில் இறுதி செய்யப்படும். அதற்கு முன்பாக, அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்த வேண்டும். இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 197 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. 48 சதவீத இலக்கை நாம் அடைந்துள்ளோம். ஏற்றுமதியில் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். நமது ஏற்றுமதியாளர்கள் பாரதத்தை பெருமையடைச் செய்துள்ளனர். அடுத்த ஆண்டு ஏற்றுமதி இலக்கை 450 முதல் 500 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும். உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்றுமதி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்  பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்’’ என்றார்.