லத்தாக் தந்த லட்சிய மேதை”: ஆர்.எஸ்.எஸ் 

இமயமலை வட்டாரத்தில் வாழும் பௌத்தர்கள் அனைவரும் குஷக் பகுலா ரிம்போசே  அவர்களை  பதினாறு ததாகத புத்தர்களில் ஒருவரான பகுல் அர்ஹத்தின் அவதாரமாகப் போற்றுகின்றனர். சமீப காலத்தில், லத்தாக் பகுதியின் மிகவும் நேசிக்கப்பட்ட லாமா இவர். 1947ல் கபைலி பழங்குடியினர் என்கிற போர்வையில் பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியபோது, இவரால் உந்தப்பட்ட லத்தாக் இளைஞர்கள், நுப்ரா படையை தோற்றுவித்து, எதிரிகளை ஸ்கர்து நகர எல்லையிலேயே வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர். அவரது ஆன்மீக ஞானம், பாரத தேசத்திற்காக அர்ப்பணிப்பு, சுயநலமில்லாத மக்கள் தொண்டு இவையே அவரை நாம் அனைவரும் போற்றுவதற்கும், வழிகாட்டியாக கருதுவதற்கும் காரணம். மனிதகுலத்திற்கு பாரதம் ஆற்றியுள்ள தொண்டுகள் குறித்து சுவாமி விவேகானந்தர் தனது சிகாகோ சொற்பொழிவில் எவ்வித கருத்துக்களை எடுத்துரைத்தாரோ, அவ்வாறே தனது வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டினார் ஆச்சார்ய குஷக் பகுலா. குஷக் பகுலாவின் நூற்றாண்டு இந்த வருடம் கொண்டாடப்படுகிறது.

(சர்சங்கசாலக் மோகன்பாகவத்தின் 2017 விஜயதசமிப் பேருரையிலிருந்து)