தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் சேர உள்ளார். அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட உள்ளது என சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதற்கு காங்கிரசின் மூத்த தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பதிவில் பழம்பெரும் கட்சி, அமைப்பு ரீதியாகவும் ஆழமான பிரச்னைகளாலும் பலவீனமாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க தீர்வுகள் ஏதும் கிடைக்கவில்லை என பதிவிட்டுள்ளார்.