2007ம் ஆண்டில், ஐ.நாடுகள் சபையால் நமது டெல்லி மெட்ரோ, உலகின் முதல் மெட்ரோ ரயில்வே திட்டமாக தூய்மை மேம்பாட்டு செயல்முறையின் (சி.டி.எம்) கீழ் பதிவு செய்யப்பட்டது. சி.டி.எம் என்பது கியோட்டோ நெறிமுறையின் கீழ், திட்ட அடிப்படையிலான பசுமை வாயுக்களை (ஜி.எச்.ஜி) குறைக்கும் ஒரு இயக்கம். சி.டி.எம் அமைப்பு, பெரிய நிறுவனங்களின் கார்பன் உமிழ்வு குறைப்புகளுக்கான ஊக்கத்தொகையை (கார்பன் கிரெடிட்) வழங்கும். அந்த நிறுவனங்கள் அவற்றை வர்த்தகம் செய்யலாம். அவ்வகையில், கடந்த 2012 முதல் 2018 வரை டெல்லி மெட்ரோ ரயில் திட்டம், 3.55 மில்லியன் கார்பன் வரவுகளை பெற்றுள்ளது. அதனை விற்று தற்போது ரூ. 19.5 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. டெல்லி மெட்ரோ, அதன் செயல்பாடுகளின் மூலம், காலநிலை மாற்ற நன்மைகளை வழங்குவதில் பாரதத்தில் ஒரு முன்னோடியாக உள்ளது.