மத்திய சுகாதார கல்வி அலுவலகத்தில் நடந்த காது கேளாதோர் சர்வதேச வார நிகழ்ச்சிக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘நாட்டில் சுமார் 9 கோடி மக்கள் காது கேட்காத பிரச்சினைகளால் கஷ்டப்படுகின்றனர். நாம் தற்போது விடுதலையின் அம்ரித மகோத்ஸவத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், கிராமப்புறங்களுக்கு நேரில் சென்று, பல்வேறு உடல்நல பிரச்சினைகளை சந்திக்கும் குழந்தைகள் உடல் பரிசோதனைகள் செய்து கொள்வதற்கு உதவ முடியுமா என பார்க்க வேண்டும்’’ என கூறினார்.