கர்நாடக சட்டசபையில் மதமாற்றத் தடுப்பு சட்டம் குறித்த விவாதத்தின்போது பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ஜி சேகர், ‘கிராமங்களில் வசிப்பவர்கள், ஏழைகள், பட்டியலின மக்கள், பழங்குடியினர் இடையே மதமாற்றம் செய்யும் வேலையில் கிறிஸ்தவ அமைப்பினர் அதிகம் ஈடுபடுகின்றனர். கிறிஸ்தவ மிஷனரிகள் மக்களை முட்டாளாக்கி, பயமுறுத்தி, லஞ்சம் கொடுத்து, மூடநம்பிக்கைகளை புகுத்தி கிறிஸ்தவ மதத்திற்குள் இழுக்கின்றனர்.
எங்கள் வீட்டருகில் உள்ள கிறிஸ்தவ மிஷனரிகள் என் தாயாரை அருகில் நடக்கும் பிரார்த்தனையில் கலந்து கொள்ள முதலில் பணிவுடன் அழைத்தனர். பிறகு மூளைசலவை செய்து மதமாற்றம் செய்தனர். ஹோசதுர்கா பகுதியில் பெரிய அளவிலான மதமாற்றங்கள் நடைபெறுகின்றன. சமீபத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் அங்கு கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் தேவாலயங்கள், மிஷனரிகளின் செல்வாக்கு மிகவும் வலுவாக உள்ளது. அவர்களை எதிர்ப்பவர்களை கற்பழிப்பு, துன்புறுத்தல் போன்ற பொய்யான வழக்குகளில் மிஷனரிகள் சிக்க வைக்கின்றனர்’ என தெரிவித்தார்.