திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன்மலை கிரிவலபாதையில் பல ஆண்டுகளாக காவடிக்குழுவினர் வேல் வைத்து வழிபட்டு வந்தனர். பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வந்த வேல், சிவலிங்கம், நூறு ஆண்டுகளுக்கு பழமையான ஸ்தல விருட்சத்தை ஹிந்து அறநிலைதுறையினர் அத்துமீறி அகற்றினர். இதனை அடுத்து பக்தர்கள், இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவன்மலையில் காலம் காலமாக ஹிந்துக்களுக்கு உள்ள வழிபாட்டு உரிமையை மீட்க அமைதியான முறையில், வழிபாட்டு வேலுடன் போராடிய பக்தர்கள், இந்து முன்னணி, ஹிந்து இயக்க பொறுப்பாளர்களை கால்துறையினர் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.