புதுமை படைக்கும் பாரதம்

உலகளாவிய புதுமை கண்டுபிடிப்பு தரவரிசை பட்டியலில் பாரதம் கடந்த வருடம் 48வது இடத்தில் இருந்தது. தற்போது 2021ல் பாரதம் இரண்டு இடங்கள் முன்னேறி 46வது இடத்தை பிடித்துள்ளது. கடுமையான கொரோனா சூழல், உலக பொருளாதார மந்தநிலை, பொதுமுடக்கம் போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் பாரதம் இதனை சாதித்து உள்ளது. ஆத்ம நிர்பர் பாரத், மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற மத்திய அரசின் பல்வேறு முயற்சிகள் இதற்கு கைகொடுத்தது மேலும், புதிய முயற்சிகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து அளிக்கும் ஊக்கம், உதவித்தொகை, கடன் வசதி, நவீன தொழில்நுட்ப அணுகல், ஆராய்ச்சிகளுக்கு உதவி போன்றவையே இந்த முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தது என்றால் அது மிகை அல்ல. கடந்த 2015ல் பாரதம் 81வது இடத்தில் இருந்து குறிப்பிடத்தக்கது.