சமூக சேவகி எமி தமிழக அரசுக்கு எழுதியுள்ள கோரிக்கையில் ‘கொரோனா பரவலை தடுக்க, வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில், வழிபாட்டு தலங்களில் பொது மக்கள் வழிபாடு செய்யவும், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தவும் தடை விதித்து, வருவாய் மற்றும் பேரிடர் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், சி.எஸ்.ஐ எனப்படும் தென்னிந்திய திருச்சபையின், துாத்துக்குடி – நாசரேத் திருமண்டல நிர்வாகத்தினர் அரசு உத்தரவை மீறி, மாவட்டம் முழுதும் உள்ள சர்ச்சுகளை திறந்து மதத் தேர்தல் நடத்தினர். இதற்காக பெரிய சர்ச்சுகளில் 2,000 பேரும், சிறிய சர்ச்சுகளில், 500 பேரும் கூடினர். இது குறித்து ஆட்சியரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. துத்துக்குடியில் உள்ள அனைத்து சர்ச்சுகளிலும் ஞாயிற்று கிழமைகளில், ஜெபம், திருவிருந்து ஆராதானை என அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இவை ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிரானது. மாவட்ட ஆட்சியர், சர்ச்சுகள் திறக்கப்படுவதை கண்டு கொள்வதில்லை. ஆனால், ஹிந்து ஆலயங்களை திறக்க அனுமதிப்பது இல்லை. ஹிந்து கோயில்களை திறந்தால் மூடுவதாக எச்சரிக்கின்றனர். கோயில்களுக்கு வருவோரை கைது செய்ய போவதாகவும் எச்சரிக்கின்றனர். ஆனால், சர்ச் திறப்பதையும், தேர்தல் நடத்துவதையும் எதிர்க்கவில்லை. எனவே, ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி செயல்படும் துாத்துக்குடி – நாசரேத் திருமண்டல நிர்வாகத்தினர் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.