ஸ்டார்ட் அப்பில் தமிழக நிலை

ஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவிப்பதிலும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதிலும் சிறந்து விளங்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் குஜராத், அந்தமான் நிகோபார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கம்யூனிஸ்ட்டுகள் ஆளும் கேரள மாநிலம்கூட கூட இந்த பட்டியலில் முன்னணியில் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கையை 4 மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கேரளா ஸ்டார்ட் அப் மிஷன் (KSUM) மாநிலத்தில் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய மேம்பாட்டு மையத்தை, களமசேரி, கொச்சியில் உள்ள தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மண்டலத்தில் (TIZ) பல்வேறு வசதிகளுடன் தொடங்கியுள்ளது. ஆனால், இந்த பட்டியலில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. ஸ்டார்ட் அப் ஈகோ சிஸ்டத்தில் வளர்ந்து வரும் மாநிலங்களின் பட்டியலில் தான் தமிழகம் இன்னமும் தொடர்கிறது. இதற்கு இங்கு ஆளும் திராவிட கட்சிகளின் நிர்வாக மெத்தனமும், சுய ஆதாயத்தை மட்டுமே எதிர்பார்க்கும் மன நிலையுமே காரணம் என்றால் அது மிகை அல்ல.