ரயில்வேயின் நீண்ட லூப் லைன்கள்

ஒரே ரயில் பாதையில் ரயில்கள் ஒன்றை ஒன்று கடக்கும்போது, அவை நிற்க, கடக்க லூப் லைன்கள் ஆங்காங்கு அமைக்கப்படும். பொதுவாக இவை 750 மீட்டர் நீளம் வரை இருக்கும். தற்போது அதிக சரக்குகளை கொண்டு செல்லும் சரக்கு ரயில்கள், அதிவேக ரயில்கள் போன்றவற்றை கையாள ஏதுவாக 1,5 கி.மீ நீளம் கொண்ட லூப் லைன்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், தெற்கு மத்திய ரயில்வே சார்பில், ஆந்திராவில் நவபேலம் எனும் இடத்தில் இரண்டாவது ரயில்வே நீண்ட லூப் லைன் அமைக்கப்பட்டு உள்ளது. முதலாவது பெரிய லூப் லைன் பிக்காவோலு ரயில் நிலையத்தில் கட்டப்பட்டது. இதைபோல விஜயவாடா கோட்டத்தில் 6 வெவ்வேறு இடங்களில் லூப் லைன்கள் அமைக்க தெற்கு மத்திய ரயில்வேக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.