கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருட்களான 182 கிலோ ஹஷீஷ் எண்ணெய் மற்றும் கஞ்சாவை கலால் வரித்துறையினர் கைப்பற்றினர். இதன் சந்தை மதிப்பு 2.5 கோடி ரூபாய். இந்த கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஹமீத், அலி, ஷரபுதீன், ஜம்ஷாத் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். சுஹைலுக்கு சொந்தமான இடத்தில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன. விசாரணையில் அவர்கள், ஆந்திராவில் இருந்து போதைப்பொருட்களை கொண்டு வந்ததாகவும் பல ஆண்டுகளாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், போதைப்பொருள் விநியோகத்திற்கு முகவர்களை பயன்படுத்துவதாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். கேரளாவில் மாற்று மதத்தினர் வாழ்க்கையை அழிக்க லவ் ஜிஹாத், போதைப்பொருள் ஜிஹாத் உள்ளிட்டவைகளில் முஸ்லிம்கள் ஈடுபடுவதாக விவாதங்கள் நடந்து கொண்டுள்ளது நினைவு கூரத்தக்கது.