பெரிய சூரிய மின்னுற்பத்தி நிலையம்

நாட்டிலேயே மிகப் பெரிய மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை பொதுத் துறை நிறுவனமான தேசிய அனல் மின் கழகம் நிறுவியுள்ளது. இது 25 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையின் செயல்பாடு சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவமான பாரத மிகு மின் நிறுவனம் (பி.ஹெச்.இ.எல்) இதை நிறுவியுள்ளது. ஆந்திர மாநிலம் சிம்ஹாத்ரி அணைக்கட்டு பகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்த மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி பேனல்களால் தண்ணீர் ஆவியாவது தடுக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்னுற்பத்தியும் செய்யப்படும்.