மின்னணு சந்தைப் பயிற்சி

மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், மின்னணு சந்தை குறித்த பயிற்சி வகுப்புகள், செப்டம்பர் 25, 25 மற்றும் அக்டோபர் 2, 3ம் தேதிகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சியில் அரசு ஆன்லைன் போர்டல் மூலம் விண்ணப்பித்து, அரசின் ஆர்டர்களை பெறுவது, பல்வேறு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பொருட்களை விற்பனை செய்வது, சேவைகள் வழங்குவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். வேலை தேடுபவர்கள், தொழில்முனைவோர், வணிக உரிமையாளர்கள், சிறு, குறு, நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள், கணக்கு, நிதித்துறை நிபுணர்கள், ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள், விற்பனைப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இப்பயிற்சியில் கலந்துகொள்ளலாம். பயிற்சிக் கட்டணம் ரூ. 4,720. இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 7305168118, 95000 34831, 91595 87689 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.