சாலை திட்டங்கள்

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ரூ. 9,577 கோடி செலவில் 34 சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த திட்டங்கள் மூலம் மாநிலம் முழுவதும் 1,356 கி.மீ சாலைகள் அமைக்கப்படும். இந்த பணிகளை நவம்பர் 2022 க்குள் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.