சமூக ஆர்வலர், தகவல் உரிமை சட்ட ஆர்வலர் என்ற போர்வையில் செயல்பட்ட ஹர்ஷ் மந்தர் என்பவர் செய்த நிதி முறைகேடுகள், பண மோசடி, எப்.சி.ஆர்.ஏ வெளிநாட்டு நிதி மோசடிகள் குறித்து சட்ட உரிமை கண்காணிப்பகம் என்ற அமைப்பு மத்திய உள்துறைக்கு பல்வேறு ஆதாரங்களுடன் புகார் அளித்தது. இதனையடுத்து அமலாக்கத்துறை, ஹர்ஷ் மந்தரால் நடத்தப்படும் தொண்டு அமைப்பு, ஈக்விட்டி ஸ்டடிஸ் மையம், இரண்டு சிறுவர் இல்லங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடத்தியது.
நடிகர் சோனு சூட் கொரோனா பொதுமுடக்க காலத்தில் பலருக்கு உதவிகள் செய்தார், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச பேருந்துகளை ஏற்பாடு செய்தார் என்பதால் பரபரப்பாக பேசப்பட்டார். ஆனால், இவர் உதவியதாக கூறப்பட்ட பலர், அப்படி எந்த உதவியும் தங்களுக்கு கிடைக்கவில்லை என கூறியுள்ளனர். இவரின் பல நடவடிக்கைகள் சர்ச்ச்கைக்கும் சந்தேகத்திற்கும் உரியதாகவே கருதப்படுகிறது. இந்நிலையில், நடிகர் சோனு சூட் வீடு, அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த இரு சோதனைகளுக்கும் இடதுசாரிகள், அரவிந்த் கெஜ்ரிவால், மமதா பானர்ஜி, காங்கிரஸ், லிபரல் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர் என்பதால் இவர்களி இருவரின் பின்புலமும் ஆராயத்தக்கதே.