பாவா பக்ருதீன் என்ற நபர், மன்னார்குடியில் உள்ள ஆசாத் தெருவில், 4 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கிறார். தஞ்சாவூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், முகமது இக்பால் என்பவர் தொடர்புடைய 721 என்ற குற்ற எண் கொண்ட ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார். மேலும், இவர் பாரதத்தில் தடை செய்யப்பட்ட முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் சிலவற்றுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனையடுத்து, சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு சென்ற தேசிய புலனாய்வு அதிகாரிகள், பாவா பக்ருதீனை கைது செய்தனர். அவரது வீட்டை சோதனையிட்டனர். அவரிடம் 6 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்திய என்.ஐ.ஏ அமைப்பினர், அங்கு கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களுடன், அவரையும் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.