டெல்லி, கஸ்தூரிபாய் காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்க அவென்யூ பகுதியில் பாதுகாப்புத்துறைக்கான புதிய அலுவலக வளாகங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி, செப்டம்பர் 16ல் தொடங்கி வைத்தார். பின்னர் தரைப்படை, கடற்படை, விமானப்படை, சிவில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர், இணையமைச்சர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர், பாதுகாப்புப் படை தலைமை தளபதி, முப்படை தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய பாதுகாப்புத்துறை அலுவலக வளாகங்களில், தரைப்படை, கடற்படை, விமானப்படை உட்பட பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் சுமார் 7,000 அதிகாரிகள் பணியாற்றுவர். இந்த வளாகம், நவீன, பாதுகாப்பான பணிச் சூழலை வழங்கும். கட்டட செயல்பாடுகளை நிர்வகிக்க, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.