நமது பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான பல பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட மோதி ராம் என்ற இடதுசாரி மாவோயிஸ்ட் பயங்கரவாதியை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்), சிறப்பு அதிரடிப்படை (எஸ்.டி.எப்), மாவட்ட காவல்துறையின் கூட்டுக் குழு பிஜப்பூர் மாவட்டத்தின் படேல்பாரா மற்றும் கோல்குண்டா கிராமங்களுக்கு இடையே கைது செய்தது. இந்த கைது நடவடிக்கை பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. முன்னதாக, இவரை பற்றி தகவல் தருபவர்களுக்கு 8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. இடதுசாரி மாவோயிஸ்டுகளின் சக்திவாய்ந்த பட்டாலியன்களில் ஒன்றன பி.எல்.ஜி.ஏ -1 பிரிவின் உறுப்பினரான இந்த பயங்கரவாதி, தன் கூட்டாளிகளுடன் 2010ல் டாட்மெட்லா கிராமத்திற்கு அருகே பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் 76 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 2017 புர்கபாலில் நடத்திய தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.