உலோகத்தில் மோடி சிலை

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த சிற்ப கலைஞர் வெங்கடேஷ்வர ராவ், அவரது மகன் ரவி இணைந்து  ஆட்டோமொபைல் நிறுவனங்களில் இருந்து வீசப்பட்ட பயன்படாத உலோகங்களை ஒரு டன் அளவுக்கு சேகரித்து அதைக் கொண்டு நமது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 14 அடி உயர சிலையை வடிவமைத்துள்ளனர். இந்த சிலையை செய்ய பத்து பேர் தேவைபட்டதாகவும், 600 மணி நேரத்தில் சிலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த கலைஞர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் பாராட்டும் குவிந்து வருகிறது. இச்சிலை தற்போது இணையத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.