மத்திய உளவுத்துறையின் அறிக்கையில், ‘ஆப்கன் சிறையில் இருந்த கேரளாவை சேர்ந்த 25 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். தேசிய புலனாய்வு முகமை இந்த பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ள 25 பேரும் மீண்டும் நாடு திரும்பலாம் என தெரிவித்துள்ளது. இதனால் நாட்டிற்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம். எனவே, இப்பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏற்கனவே, சர்வதேச விமானங்கள் கண்காணிப்பில் உள்ளன. சர்வதேச எல்லைகள், கடலோர பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.